டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்து கோர விபத்து: 27 பேர் உயிரிழப்பு.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0 2867

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவிலிருந்து கான்புர் நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி  குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் போலீசாரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ,பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணநிதியாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments