ஐ.ஏ.எஸ்.அதிகாரி மனைவியை ஆபாசமாக திட்டிய கே.எஸ்.அழகிரியின் பேரன், பேத்தி - வீடியோ வைரல்!

0 14110

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரனும், பேத்தியும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி மனைவியை ஆபாசமாக திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், கே.எஸ்.அழகிரியின் பேத்தி பாரதி, பேரன் சுபாஷிற்கும், ஐ.ஏ.எஸ்.அதிகாரி மனைவிக்கும் கைகலப்பானது.

இத்தகராறில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அழகிரியின் பேரனும், பேத்தியும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி மனைவியை ஆபாசமாக திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

இருதரப்பினரும் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments