பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

0 3414

அம்புத்தூரில் உள்ள மளிகை கடை ஒன்றில் இங்கு சிசிடிவி உள்ளது என்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்ட கடையில், அதனை கவனிக்காமல் பதுங்கியும், படுத்து உறங்கியும், நடித்து  பூட்டை உடைத்து திருடிவிட்டு வெளியே வரும் போது சிசிடிவி கேமராவை பார்த்து ஓடிய சிரிப்பு திருடர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

அம்பத்தூர் பகுதியில் உள்ள பூட்டப்பட்ட மளிகை கடை ஒன்றிக்கு ஏதோ குழி தோண்ட செல்வது போல எந்த வித பயமுமில்லாமல் கையில் இரும்பு கம்பியுடன் சென்ற மாஸ்க் திருடர், அந்த கடையின் பூட்டை உடைக்க முயன்றார்.

கீழ்பூட்டை நெம்பி உடைத்து வீசிய அந்த ஜேம்ஸ் பாண்ட், மேல் பக்கம் போடப்பட்டிருந்த பூட்டை உடைக்க சற்று சிரம்மப்பட்டார். அதற்குள்ளாக தூரத்தில் ஒரு வாகனத்தின் முகப்பு வெளிச்சம் தெரிந்ததும், எதிர் நாட்டு ராணுவ வாகனத்தை கண்ட உளவாளி போல உப்பு மூட்டைக்கு பின்னால் சென்று குத்தவைத்து பதுங்கி கொண்டார்.

அவரது திருட்டு ஆட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக ஒண்டவுன் ஆட்டக்காரராக மாஸ்க் அணிந்த டவுசர் பாண்டி அங்கு வந்தார். அந்த கம்பியை வாங்கி பூட்டை நெம்பினார்.

அடுத்தடுத்து வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தால் மிரண்டு போன இருவரும் ஓடிச்சென்று ஓரமாக பதுங்கினர். பார்ப்போருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஆனந்த சயனத்தில் படுத்துக் கொண்டனர். மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இரு வாகனங்கள் வந்துவிட இந்த முறை குப்புறப்படுத்துக் கொண்டனர்.

பின்னர் கம்பியை வைத்து மேல் பூட்டை நெம்பி உடைத்த இரு திருடர்களும் ஒருவர் பின் ஒருவராக கடைக்குள் நுழைந்து உள்ளே இருந்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு வெளியே வந்து எதேச்சையாக வலப்பக்கம் திரும்பி சிசிடிவி காமிராவை கண்டதும் கம்பியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்..!

கடையின் கதவில் இங்கு சிசிடிவி காமிரா பொறுத்தப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டதை கவனிக்காமல் ஜேம்ஸ் பாண்டு லெவலில் பதுங்கி படுத்து கொள்ளை அடித்துச்சென்ற இரு சிரிப்பு திருடர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments