புதுச்சேரியில் மின்தடையை கண்டித்து தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம்.. அமைச்சர் அவசர ஆலோசனை..!

0 2697

புதுச்சேரியில் மின் ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், மின் தடையை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்துறை தனியார் மயமாக்கலை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரி விழுப்புரம் செல்லும் சாலையில் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் நமச்சிவாயம், நிலைமையை சமாளிக்க 2 கம்பெனி துணை ராணுவப்படையை அழைத்துள்ளதாக தெரிவித்தார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments