விவசாயிகள் பெண் நிர்வாகியை தகாத வார்த்தையால் பேசியதாக புகார் - அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு..!

விவசாயிகள் பெண் நிர்வாகியை தகாத வார்த்தையால் பேசியதாக புகார் - அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு..!
விவசாய சங்க பெண் நிர்வாகியை தரக்குறைவாகப் பேசியதாக தென்னிந்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக பேசியதால், தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெண் பிரதிநிதி கௌசல்யா ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அய்யாக்கண்ணு அவரை தகாத வார்த்தையால் திட்டியதால், விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்தப் பெண் வெளியேற்றப்பட்டார்.
Comments