காதல் மனைவி பிரிந்த சோகம்... குண்டு மிரட்டல் விடுத்த விபரீதம்

0 2740

காதல் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே 5வது முறையாக ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய நபர், ஈரோடு ரயில் நிலையம்,பேருந்து நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டு ரயில் நிலையம், பேருந்து நிலையம்போன்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. 

மர்ம நபரின் செல்போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது குறித்து கண்காணித்து வந்த போலீசார் மீண்டும் அதே எண்ணில் தொடர்பு கொண்டு குரலை பதிவு செய்தனர்.

அந்த எண்ணில் பேசிய நபர் ஏற்கனவே ஈரோடு ரயில் நிலையத்திற்கு 4 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மேலும் அந்த நபர் தெற்கு,நகர, இருப்புப் பாதை ஆகிய 3 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சந்தோஷ்குமார் என்பதும் தெரிய வந்தது.

காதல் மனைவியை பிரிந்த கவலையில் இருந்த சந்தோஷ் குமார் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தோஷ்குமாரை கைதுசெய்ய காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments