ஜோடிக்கிளிகளின் தொல்லையால் பாடி பறந்த பச்சைக்கிளி.. சிங்கிள் பசங்க சாபம் பலித்தது..!
மனைவியின் ஒப்புதலுடன் முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடித்தனம் நடத்திய புது மாப்பிள்ளை 2 மனைவிகளின் தொல்லை தாங்க இயலாமல் வீட்டில் இருந்து தலைமறைவாகி உள்ளார். ஜோடி கிளிகளின் தொல்லையால் பாடி பறந்த கேடிகிளி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா ? என்பது போல முதல் மனைவியின் ஒப்புதலோடு, முன்னாள் காதலியை 2 வது திருமணம் செய்து கொண்டவர் டிக்டாக் பிரபலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாண்..!
இந்த இளைஞரின் 2 ஆவது திருமண வீடியோ, கடந்த வாரத்தில் டிரெண்டிங் ஆகி சிங்கிள் பசங்களின் சாபத்தை பெற்றுக் கொடுத்தது
முதல் மனைவி விமலாவுக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் ஊர் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்ட விமலா, தனது கணவருக்கு நித்ய ஸ்ரீயை , 2 வது திருமணம் செய்து வைத்திருப்பது தெரியவந்ததும் புது மனைவி நித்யஸ்ரீக்கும், விமலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரே வீட்டில் ஒன்றாக அந்த இளைஞருடன் சேர்ந்து குடித்தனம் நடந்த வேண்டும் என்ற இந்த ஜோடிக்கிளிகளின் ஒப்பந்தத்தில் கீறல் விழுந்துள்ளது.
ரெட்டை ரோசாக்களுடன் ஒரே வீட்டில் உற்சாகமாக ஊஞ்சல் ஆட நினைத்த அந்த காதல் ராசாவிடம், விமலாவை அவளது முதல் கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று கூறி 2 வது மனைவி நித்யஸ்ரீ சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.
விமலாவும் , நித்தியஸ்ரீயும் அந்த இளைஞரிடம் கடுமையாக சண்டையிட்டதால், இதோ வருகிறேன் என்று கூறி சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
நித்தியஸ்ரீயை சந்திக்கவும் வரவில்லை.முதல் மனைவி விமலா வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் தாலி கட்டி தலைமறைவான கண்ணாளனை இரண்டு பேரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Comments