எம் 1 பிரிவை சேர்ந்த வாகனங்களில் 6 ஏர் பேக்குகளை பொருத்த கூடுதல் கால அவகாசம்

0 3684

எம் 1 பிரிவை சேர்ந்த வாகனங்களில் 6 ஏர் பேக்குகள் பொருத்துவதை கட்டாயமாக்குவதற்கான காலகெடுவை மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

ஓட்டுநரை தவிர மேலும் 8 பேர் பயணிக்க கூடிய வாகனங்களில் 6 ஏர்பேக்குகளை பொருத்துவதற்கான விதிமுறையை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல் படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருந்தது. ஆனால், தற்போது இந்த காலக்கெடு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ மொபைல் துறையில் நிலவும் உலகளாவிய விநியோக சங்கிலி தடைகள், பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments