நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

0 2021
நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

160 அடி உயரமுள்ள சோலையாறு அணை தென்மேற்கு பருவமழையால்  நிரம்பி 77 நாட்களாக முழு கொள்ளவுடன் காணப்படுகின்றது. இதன் காரணமாக கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வால்பாறையின் வனப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மிகச்சிறப்பான மலைப்பிரதேசம் வால்பாறை..!

இங்கு விவசாயத்துக்கு நீருற்றும் சோலையாறு, நீராரு, காடம்பாறை அணைகளும் அமைந்துள்ளன. மூன்று அணைகளும் நிரம்பி இருந்தாலும் மொத்தம் 160 அடி ஆழம் கொண்ட சோலையாறு அணை தென் மேற்கு பருவ மழையால் ஜூலை 10 ந்தேதி தொடங்கி தற்போது வரை 77வது நாளாக நிரம்பி ததும்புகின்றது.

அவ்வப்போது சாரல்மழை தூறிக் கொண்டே இருப்பதால் சீசன் ரம்பியமாக உள்ளது. வால்பாறையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி காண்போரை கவரும் வகையில் உள்ளது

இங்கு சுற்றுலாபயணிகள் குளித்து மகிழ பிர்லா நீர் வீழ்ச்சி, சின்னகல்லார் நீர்வீழ்ச்சி கூலாங்கல் ஆறு, ஆகியவை தவழ்ந்து ஓடுகின்றன..!

நல்ல முடி காட்சி முனை, நம்பர் பாறை, சக்தி எஸ்டேட் , பனிமூடிய கவர் கல் பகுதி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள 4 ஏக்கர் பரப்பளவிலான தாவரவியல் பூங்கா போன்றவை கண்களுக்கு விருந்தாக உள்ளது

சென்னையில் இருந்து வால்பாறை செல்ல விரும்பினால் பேருந்தில் பொள்ளாச்சி சென்று அங்கிருந்து வால்பாறையை அடையலாம். அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து வால்பாறைக்கு இயக்கப்படுகின்றது. ரெயிலில் செல்லவேண்டுமானால் கோவைக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் வால்பாறையை அடையலாம்..!

பைக்கர்ஸ் , கார் மற்றும் வேன்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்லும் வகையில் சாலை சிறப்பாக உள்ளது.

மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது வால்ப்பாறை மலைப்பிரதேசம்..! அவ்வபோது மேகங்கள் சாலையை மூடிக்கொள்ளும் அதனால் நிதானமாகவும் முன் எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments