பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

0 15169
பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த அன்று மாணவியின் தாய் செல்வி தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் பள்ளி நிர்வாகத்திடம் பேரம் பேசியதை சிசிடிவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது செல்வி 2வது முறையாக புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்திமெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் கொலை என மாணவியின் தாய் செல்வி கூறிவந்த நிலையில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்ரீமதி தர்கொலை செய்து கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து செல்வியுடன் நீதி கேட்டு வலம் வந்த வழக்கறிஞர்கள், அவரது ஊர் பிரமுகர்கள் என பலரும் அதனை ஏற்று அமைதி காத்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி உயிரிழப்பில் தாய் செல்வியின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த கார்த்திக் பிள்ளை என்ற யூடியூப்பர் மீது டிஜிபி அலுவலகத்தில் செல்வி புகார் அளித்தார்.

அதன் பின்னர் மாணவி உயிரிழந்த அன்று தாய் செல்வி தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் அமர்ந்து பள்ளி நிர்வாகிகளிடம் பேரம் பேசியதாக சிசிடிவி ஆதாரத்தை யூடியூப்பர் கார்த்தி வெளியிட்டதால் செல்வி அதிர்ச்சிக்குள்ளானார்.

எவரும் துணைக்கு வராத நிலையில் மாணவியின் தாய் செல்வி தனது கணவர் ராமலிங்கத்தை மட்டும் அழைத்துக் கொண்டு வேப்பூர் காவல் நிலையத்துக்கு சென்று, யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார்.

புகார் அளித்து விட்டு வெளியே வந்த செல்வி, தாங்கள் யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை மீது எப்.ஐ.ஆர் பைல் செய்திருப்பதாக தெரிவித்தார். உண்மையில் எப்.ஐ.ஆர் ஏதும் பைல் செய்யப்படவில்லை காவல் ஆய்வாளரிடம் , செல்வி புகார் மட்டுமே அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments