கம்மல், கொலுசு அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்காததால் பெற்றோர் வாக்குவாதம்

0 3286
கம்மல், கொலுசு அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்காததால் பெற்றோர் வாக்குவாதம்

குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு விரதமிருந்து கம்மல், கொலுசு அணிந்து பள்ளிக்கு வந்த 10ஆம் வகுப்பு மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்காததால் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் அடுத்த வடலிவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மாணவனை கம்மல், கொலுசை கழற்றி விட்டு வருமாறு கூறினர்.

கோவிலுக்கு விரதமிருந்து அணிந்திருப்பதால் கழற்ற முடியாது என்று கூறிய பெற்றோர்கள், மற்ற பள்ளிகளில் அனுமதிக்கும்போது இந்த பள்ளியில் மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments