17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 19 வயது இளம்பெண் கைது

0 5640
17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 19 வயது இளம்பெண் கைது

நாகை அருகே 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

ஆலமழையை சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஐடிஐ முடித்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகியதாக கூறப்படுகிறது.

அந்த பெண் தற்போது கர்ப்பமான நிலையில், சிறுவனின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது மகனுக்கு அப்பெண் பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகியிருப்பதாக புகார் அளித்தார்.

இதன்பேரில் விசாரணை நடத்தி இளம்பெண்ணை கைது செய்த போலீசார், அவர் கர்ப்பமாக இருப்பதால் மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments