சேவூர் அரசுப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..

0 3169

திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் அரசுப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் மற்றும் பணி மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காலாண்டு தேர்வை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 23ஆம் தேதி சேவூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பூபதி என்ற மாணவனை 4 ஆசிரியர்கள் அடித்ததாக கூறப்படும் நிலையில், மாணவன் போதை வஸ்து பயன்படுத்தியதால் ஆசிரியர்கள் கண்டித்ததாக பள்ளி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், வேலூர் ஆரணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments