வீட்டுக்குள் புகுந்த நாகம் நாகினியான வீட்டுக்காரம்மா..! அருள்வாக்கு அட்ராசிட்டி..!

0 17966
வீட்டுக்குள் புகுந்த நாகம் நாகினியான வீட்டுக்காரம்மா..! அருள்வாக்கு அட்ராசிட்டி..!

கடலூர் அருகே கோழிக் கூண்டுக்குள் புகுந்த நல்லபாம்பைப் பார்த்து, பெண் நாகினி ஆட்டம் ஆடி அருள்வாக்கு சொன்ன சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி கதிர். இவரது மனைவி தீபா. இவர்கள் வீட்டில் இரவு நேரத்தில் கோழி அதிக அளவில் சத்தமிட்டபடி இருந்தது.

எழுந்து வந்து கதிர் கோழிக்கூண்டை பார்த்தபோது நாகப் பாம்புடன் கோழி சண்டை போட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

உடனடியாக அவர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்து காத்திருந்தார். செல்லா அங்கு செல்வதற்குள் பாம்பு கடித்ததில் கோழி இறந்துவிட்டது.

ஆனாலும் கூண்டை விட்டு வெளியே வராமல் பதுங்கி இருந்த பாம்பைச் பிடிக்க செல்ல முயற்சித்தார். அப்போது வீட்டில் இருந்த கதிருடைய மனைவி தீபா திடீரென நாகினியாக மாறி சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவரை அங்கிருந்தவர்கள் வணங்கிய போது அவர் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார். என்னை கும்பிட்டாயா? நீ என அங்கிருந்தவர்களிடம் உக்கிரமாக கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அவரை ஆசிவாசப்படுத்தி அமர வைத்தனர்.

இதற்கிடையே அந்த பாம்பினை லாவகமாக பிடித்த செல்லா அதனை பத்திரமாக பாட்டிலில் அடைத்துச் சென்று காப்பு காட்டில் விட்டார்.

பாம்பை வணங்கும் குணம் கொண்ட தீபா தன்னை தேடி நாகம்மாவே வந்திருப்பதாக கருதி நாகினி அவதாரம் எடுத்ததாக அங்கிருந்தவர்கள் பரவசமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments