கள்ளக்காதலியுடன் சேர்ந்து இளைஞரைக் கொன்ற கள்ளக்காதலன்.. மகன்களால் சிக்கிய பெண்.!

0 4946

முதல் கணவரை பிரிந்து, இளைஞரோடு குடும்பம் நடத்திய பெண், காய்கறி வெட்டும் கத்தியால், புதிய கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலனை பதம் பார்த்த காதலி கொலையை மறைக்க பிள்ளைகளையே பலிகடாவாக்க துணிந்த கொடூரதாய் கள்ளகாதலனோடு சிக்கியது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்த காட்சியை மிஞ்சும் அளவுக்கு நிஜ சம்பவம் ஒன்று சென்னை சாலிகிராமம் பகுதியில் நடந்துள்ளது.

கணவனைப் பிரிந்த பெண்ணுக்காக இரண்டு கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில், முதல் ஆண்நண்பரை இரண்டாவது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு , காதலியின் மகன்களை பலிகடாவாக்க நினைத்தவர்களை, காவல்நிலையத்தில் வைத்து மூன்றாவது அப்பா இவர்தான் என பிள்ளைகள் காட்டிக் கொடுத்ததால் இருவரும் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவர், கணவர் நாகராஜைப் பிரிந்து சாலிகிராமத்தில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அவர் சவுந்தர்யா வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது சௌந்தர்யாவின் இரு மகன்களை விஜி அடித்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடிபோதையில் இருந்த விஜியை சிலர் வீடு புகுந்து குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக சவுந்தர்யாவின் மகன்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தாய் சவுந்தர்யா இரவு துப்புரவுப் பணிக்கு சென்றுவிட்டதாகவும், குடிபோதையில் இருந்த விஜி தங்களைக் கடைக்கு அனுப்பியதாகவும், திரும்பி வந்த போது ரத்த வெள்ளத்தில் விஜி இறந்துகிடந்ததாகவும் தெரிவித்தனர்.

போலீசார் மீண்டும் விசாரித்த போது, தங்களை வெளியில் விளையாட விடாமல் தடுத்து தொல்லை கொடுத்ததால் விஜியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடைபெற்றபோது, காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபு என்பவரை அழைத்து வந்து விசாரித்தபோது, அங்கிருந்த சிறுவர்கள் இருவரும் அப்பா என்று அழைக்கவே, அவர் யார் எனக் போலீசார் கேட்டபோது தங்களுடைய மூன்றாவது அப்பா என தெரிவித்துள்ளனர்.

சவுந்தர்யாவுக்கும் நாகராஜுக்கும் 2008 ஆம் ஆண்டில் திருமணம் நடந்து, பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுதுதான் நாகராஜ் நண்பராக இருக்கும் விஜியின் தொடர்பு சவுந்தர்யாவிற்கு கிடைத்துள்ளது.

இதனிடையே, துப்புரவு பணி செய்து வரும் பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரும் சௌந்தர்யா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

நேற்று மாலை சவுந்தர்யா வீட்டிற்கு வந்த பிரபுவுடன், மதுபோதையில் இருந்த விஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சவுந்தர்யா வீட்டில் காய்கறி அரியும் கத்தியால் விஜியை குத்தியுள்ளார்.

வெளியே இருந்த தனது மகன்களிடம் வழக்கம் போல நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதாகவும் , இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தினரை அழைத்து யாரோ ஒரு கும்பல் விஜியை கொலை செய்து விட்டதாக கூற சொல்லியும், வேறு எதாவது கேட்டால் தாங்களே கொலை செய்துவிட்டதாக கூறும்படியும் சொன்னதால், அவர்கள் சொல்லி கொடுத்தபடியே சிறுவர்கள் காவல்நிலையத்தில் தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபு மற்றும் சவுந்தர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments