மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

0 3640

திருச்சி அருகே மது போதையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பால் பண்ணை அருகே உள்ள அந்த டாஸ்மாக் பாரில் மது அருந்திய செல்வம் தரப்பினருக்கும், விஜயபாபு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்த நிலையில், மீண்டும் அங்கு வந்த விஜயபாபு செல்வத்தின் மீது பாய்ந்து கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து போலீசார் விஜய்பாபுவை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments