அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியரை பழிவாங்க நினைத்து பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்.!

0 2930

கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியரை பழிவாங்க நினைத்து பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மல்லப்பாடியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பள்ளியில் பணி புரியும் தமிழ் ஆசிரியர் அனு முத்துராஜ், தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments