பட்டுக்கோட்டை ருத்ர சித்தரை ஒட்டுத்துணியில்லாமல் ஓடவிட்ட சிங்கப்பூர் ‘ஹல்க்’ சாமியார்..!

0 37005

பட்டுக்கோட்டை மக்களிடம் ருத்ர சித்தராக வலம் வந்த அருள் வாக்கு சாமியார் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள பக்தரின் நோயை குணமாக்க சென்ற இடத்தில், ஹல்க் சாமியார் ஒருவரிடம் சிக்கி சின்னாபின்னமான வீடியோ வெளியாகி உள்ளது.

உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் தப்பி வந்த சித்தரின் சித்து விளையாட்டு குறித்து விவிவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

பெண்களின் நோயை கட்டையால் குத்தியே குணப்படுத்தி விடுவதாக கூறி விபூதி போல அருள்வாக்கை அள்ளி விட்டு பட்டுக்கோட்டையில் பிரபலமானவர் ருத்ர சித்தர் ராஜ்குமார்..!

ராஜ்குமாரின் பாதம் கூட தரையில் பட்டுவிடக்கூடாது என்று மலர் துவி வரவேற்று அவரை கடவுளுக்கு நிகராக அவரது பகத்ர்கள் கொண்டாடி வந்தனர்

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சிங்கப்பூரை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது சகோதரருக்கு உடல் நலக்கோளாறு என்று கூறி அவரது செலவில் ருத்தர சித்தரை சிங்கபூருக்கு அழைத்துச்சென்றுள்ளார். அவர் அழைத்துச் சென்ற இடத்தில் ஏற்கனவே சிங்கபூரை சேர்ந்த ஹல்க் சாமியார் ஒருவர் அருள் வாக்கு கூறிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது இரு சாமியாருக்குள்ளும் யார் ஒரிஜினல் என்ற சண்டை ஏற்பட்டுள்ளது. நம்ம ஊர் சித்தரை நாலு சாத்து சாத்திய சிங்கப்பூர் சாமியார் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதற்காக கழுத்தில் துண்டை போட்டு இழுத்துப்பிடித்துக் கொண்டார்..

ருத்ர சித்தர் ராஜ்குமாரை வெளியே விடாமல் கதவை பூட்டி வைத்து தனது கண்ணை உற்றுப்பார் என்று ஹல்க் சாமியார் டியூசன் எடுக்க சித்தர் மிரண்டுபோனார்...

அவருடன் சென்ற பெண் கதவை திறந்து விட்டதும் எங்க ஏரியாவுக்கு வாடா? என்ற ரீதியில் சவுண்டு விட்டு தப்பிய ருத்ர சித்தரின் வேட்டியை எட்டிப்பிடித்து, சிங்கப்பூர் சாமியார் உருவியதால், உடலில் ஒட்டுத்துணியில்லாமல் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டார் பட்டுக்கோட்டை சித்தர் ராஜ்குமார்..

ஆபாச வார்த்தைகளால் சிங்கப்பூர் சாமியாரை வசைபாடியவாறே வீதிக்கு வந்த சித்தர் ராஜ்குமார் நிர்வாணமாகவே காரில் ஏறி சிங்கப்பூர் காவல் துறையினரிடம் புகார் அளித்து விட்டு 15-ந்தேதி தமிழகம் திரும்பியதாக அவரது மகன் சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியாது என்று பட்டுக்கோட்டை சித்தர் ராஜ்குமார் பவ்வியமாக அமைதி காத்த நிலையில் சிங்கப்பூர் ஹல்க் சாமியாரின் ஆதரவாளர்கள் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு சித்தர் ராஜ்குமார் அசிங்கப்பட்டதை அம்பலப்படுத்தி உள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பின்னர் சித்தருக்காக சில்லரையை சிதறவிட்ட பக்த கோடிகள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிபோயுள்ளனர்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments