கோவிலில் பர்ஸை தவறவிட்ட ராணுவ வீரர் பர்ஸில் இருக்கும் ராணுவ ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைக்க கோரி வேண்டுகோள்.!

0 2920

பழனி முருகன் கோவிலில் பர்ஸை தவறவிட்ட ராணுவ வீரர் ஒருவர், அதில் ராணுவ அலுவலக முக்கிய ஆவணங்கள் இருப்பதால் பணத்தை எடுத்துக் கொண்டு ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைக்க கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரரான மனோ, நேற்று மாலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது அவரது பர்ஸ் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து ராணுவ வீரர் போலீசில் புகாரளித்த போது, கோவிலில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால், யார் திருடியது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்ததாக, அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments