கணவன் வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்த ஆவேச சிங்கப்பெண்..! மாமியார் கொடுமைக்கு பதில் அடி..!

0 4515
கணவன் வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்த ஆவேச சிங்கப்பெண்..! மாமியார் கொடுமைக்கு பதில் அடி..!

மயிலாடுதுறை அருகே வரதட்சனை கொடுமையால் கணவனின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவான நிலையில், 20 நாட்கள் வீட்டிற்கு வெளியே சமைத்து தூங்கி காத்திருப்பு போராட்டம் நடத்திய மருமகள் ஆவேசமாகி கடப்பாரை கம்பியால் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் குடிபுகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்குவெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது

திருமணத்தின் போது பெண்ணுக்கு 24 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. 3மாதம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கணவன் வேலைக்காக சென்னை புறப்பட்டு சென்ற பின்னர், கூடுதல் வரதட்சனை கேட்டு மாமியார் , மருமகள் பிரவீணாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

கணவர் நடராஜன் சென்னையில் தங்கி வேலை பார்த்த நிலையில் வரதட்சனை கேட்டு கணவரின் குடும்பத்தாரின் துன்புறுத்தல் அதிகரித்ததாக குற்றஞ்சாட்டும் பிரவீணா, கணவரின் இளைய சகோதரர் சதீஷ் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அது குறித்து மாமியாரிடம் தெரிவித்த போது, அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் கணவரிடம் கூறியபோது அவரும் பிரவீணாவை நம்பாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்டு கொண்டு வீட்டிற்கு வராமல் சென்னையிலேயே இருந்ததாக கூறப்படுகின்றது

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரவீனாவை வீட்டை விட்டு துரத்திய கணவனின் குடும்பத்தினர், தனது மகன் உன்னுடன் வாழமாட்டான் என்றுகூறி வீட்டைபூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆன நிலையில் கணவர் நடராஜனை வரவைத்து அவருடன் சேந்து வாழ வைக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரவீனா. பூட்டப்பட்ட கணவர் வீட்டு வாசலில் கடந்த 20 நாளாக தன்னந்தனியாக சமைத்து, உண்டு, படுத்து உறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தார்

ஊர் பஞ்சாயத்தார்கள் சமாதானம் பேசியும் நடராஜன் குடும்பத்தினர் மதிக்காததால் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜீடம் பொதுமக்களுடன் சென்று பிரவீனா புகார் மனு அளித்தார். வீட்டிற்கு வந்து மாடுகளை மட்டும் பராமரித்துவிட்டு சென்ற கணவரின் குடும்பத்தார், வீட்டு வாசலில் கிடக்கும் மருமகள் மீது சிறு பரிதாபம் கூட கொள்ளவில்லை.

வீட்டை திறந்துவிடாததால் ஆத்திரமடைந்த பிரவீனா பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்தார். தட்டினால் திறக்காது தடையை உடைக்க வேண்டும் என்று ஆவேசமான பிரவீனா கையில் கடப்பாரை கம்பியை எடுத்து கதவை உடைத்து திறக்க முயன்றார்

பொதுமக்கள் முன்னிலையில் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து அதிரடியாக கணவரது வீட்டிற்குள் புகுந்தார் பிரவீணா

20 நாட்களாக கண்டுகொள்ளாத மயிலாடுதுறை போலீசார் , பிரவீணா , மாமியார் வீட்டு கதவை கடப்பாறை கொண்டு உடைத்து கணவர் வீட்டிற்குள் புகுந்து விட்டார் என்றதும் பிரவீணா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போய்விடக்கூடாது என்பதற்காக இருதரப்பையும் அழைத்து விசாரிக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments