குடும்பத்தினர் 3 பேரை கட்டிப் போட்டு விட்டு 7 பேர் கும்பல் கொள்ளை

0 4424

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று, குடும்பத்தினர் 3 பேரை கட்டிப் போட்டு விட்டு, 10 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மருவூர் அவென்யூவில் வசிக்கும் மின்வாரிய ஊழியர் ஹரிஹரன் நேற்றிரவு வீட்டில் தனது மனைவி, மகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவர்கள் வைத்திருந்த செல்போன்களை முதலில் பறித்துள்ளனர்.

பின் அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, கட்டி போட்டுவிட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை அக்கம்பக்கத்தினர் அவர்களை விடுவித்ததையடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments