அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்தில் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை, காணொலி மூலம் பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.
பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகளை சமாளித்தல், வனவிலங்குகள் மற்றும் வன மேலாண்மை தொடர்பான விஷயங்களில் சிறப்பான கொள்கைகளை வகுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
Comments