ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பட்டா கத்தியை தரையில் தேய்த்து பீதியை ஏற்படுத்திய கல்லூரி மாணவன் கைது.!

சென்னை புறநகர் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பட்டா கத்தியை தரையில் தேய்த்து பீதியை ஏற்படுத்திய மாநிலக் கல்லூரி மாணவனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணித்த இளைஞர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியப்படி பெரம்பூர் ரயில் நிலைடத்தில் இருந்து இந்து கல்லூரி நிலையம் வரை சென்றுள்ளனர்.
அப்போது நடைமேடையில் பட்டாக் கத்தியை தேய்த்தப்படி சென்றது பயணிகளை அச்சமடைய செய்தது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய திருவள்ளூர் ரயில்வே போலீசார், மாநில கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயிலும் ஜீவா என்ற மாணவனை கைது செய்துள்ளனர்.
தலைமறைவாகவுள்ள சக மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
Comments