இந்தியன் தாத்தாவை சந்தித்த அந்நியன்..! கமலின் அடுத்த பாய்ச்சல்..!

0 3232
இந்தியன் தாத்தாவை சந்தித்த அந்நியன்..! கமலின் அடுத்த பாய்ச்சல்..!

ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்த நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் இந்தியன் படத்தின் 2 வது பாகத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று பேசிய காட்சி வெளியாகி உள்ளது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடக்குமா, நடக்காதா? என்ற எதிர்பார்ப்பில் நீண்ட நாட்களாக காத்திருந்த இருந்த லைக்காவின் இந்தியன் 2 வில், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் இணைந்ததால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வேகம் எடுத்துள்ளது.

கமல் ஹாசன் வெளி நாட்டு சுற்றுபயணத்தில் இருந்ததால் அவர் இல்லாத காட்சிகளை மட்டுமே இயக்குனர் ஷங்கர் படமாக்கி வந்தார். இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் சந்தித்துக் கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படத்தில் சேனாபதி கதாபாத்திரத்திற்காக கத்தி மீசையுடன் கமல் தன்னை தயார் படுத்திக்கொண்டுள்ளார்.
ஈகோ காரணமாக நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருந்த இயக்குனர் ஷங்கரும் கமல்ஹாசனும் பழைய கசப்பை மறந்து இந்தியன் 2 வுக்காக இணைந்து பணியாற்றும் இந்த காட்சியை கமல் ஹாசனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

விக்ரம் கொடுத்த பிரமாண்ட வெற்றியை ருசித்த திருப்தியோடு கமல்ஹாசன் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருவதாக ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments