டாஸ்மானிய கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய 235 'பைலட்' திமிங்கலங்கள்.. 200 திமிங்கலங்கள் உயிரிழந்ததாகத் தகவல்..!

0 2419
டாஸ்மானிய கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய 235 'பைலட்' திமிங்கலங்கள்.. 200 திமிங்கலங்கள் உயிரிழந்ததாகத் தகவல்..!

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானிய மாநில கடற்கரையில் கரை ஒதுங்கிய 200 பைலட் இன திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

நேற்று டாஸ்மானியாவின் ஓஷன் கடற்கரையில் 235 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒவ்வொன்றும் சுமார் 2,500 கிலோ எடையுள்ளதால் அவற்றை தூக்கிச்சென்று கடலில் மிதக்க வைப்பது பெரும் சவாலாக இருந்தது.

200 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் எஞ்சியுள்ள 35 திமிங்கலங்களை மீட்பு குழுவினர் சிரமப்பட்டு கடலுக்குள் தள்ளி பின் படகுகளுடன் இணைத்து ஆழ்கடலுக்கு சென்று அவற்றை விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments