கமலின் கம்பீரக் குரலில் பொன்னியின் செல்வனில் பாண்டியர்களின் வருகை..!

0 3013
கமலின் கம்பீரக் குரலில் பொன்னியின் செல்வனில் பாண்டியர்களின் வருகை..!

பொன்னியின் செல்வனில் பாண்டியர்களின் அறிமுகத்தை கமல் ஹாசனின் கம்பீரகுரலில் புதிய முன்னோட்டமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

சோழர்களின் பெருமை பேசும் பொன்னியின் செல்வனில் கமல்ஹாசனின் கம்பீர குரலால் பாண்டியர்களின் அறிமுகம் அதிர வைக்கின்றது.

வீரபாண்டியன் தலையை கொய்த ஆதித்த கரிகாலனை தீர்த்துக் கட்ட தீவிரம் காட்டிய பாண்டியர்களின் வருகையை அறிமுகம் செய்துள்ளனர்.

குணச்சித்திர நடிகர் கிஷோர் ரவிதாசனாகவும்... ரியாஸ்கான் சோமன் சம்பவனாகவும்... வினய் தேவராளனாகவும்... அருண் சிதம்பரம் வரகுணனாகவும்... வாள் ஏந்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ந்தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments