ஓடும் ரயிலில் பிரபல ரவுடியை வெட்டிக் கொல்ல முயற்சி.. தாக்குதல் நடத்திய மர்மகும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

0 3681

சென்னையில் ஓடும் ரயிலில் புகுந்து பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

துரைப்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ரவீஸ்வரன் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கொலை வழக்கு ஒன்றில் அவர் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு,கடற்கரை-திருவான்மியூர் வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார்.

கோட்டை ரயில் நிலையத்தில் திடீரென உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் ரவீஸ்வரனை கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ரவீஸ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments