உடல் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி..!

0 5901

செங்கல்பட்டு அருகே உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்ததால் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

கூடுவாஞ்சேரியை சேர்ந்த சந்திரா, தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வந்தார். சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சந்திரா சென்றுள்ளார்.

இந்நிலையில், செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலான தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சந்திரா தான் இறந்திருக்க வேண்டும் என கருதிய உறவினர்கள், உருவமும் ஒத்துபோனதால் உயிரிழந்தது தனது அம்மா தான் என வடிவேலு உறுதி செய்ததை தொடர்ந்து, மூதாட்டியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, மாலையில் இறுதி மரியாதையுடன் மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று சந்திரா உயிருடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதுகுறித்த தகவலின் பேரில், அடக்கம் செய்யப்பட்ட உடல், யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments