அவள் கொடுத்த தேனீரில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்.. தூரிகையின் இழப்புக்கு கபிலன் உருக்கம்..!

0 4184

எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டாள், நான் எப்படி தூங்குவேன் ? என்று சினிமா பாடலாசிரியர் கபிலன் தனது மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்ட சோகத்தை கவிதையால் பகிர்ந்துள்ளார்...

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் கபிலன். இவரது மகள் தூரிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மகளின் உயிரிழப்பு தொடர்பாக மவுனம் காத்து வந்த கவிஞர் கபிலன் கவிதை வரிகளால் தனது ஆற்றாமையை தெரிவித்துள்ளார்.

அதில், எல்லா தூக்கமாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டாள், நான் எப்படி தூங்குவேன் என்று தூக்கமின்றி தவிப்பதை சுட்டிக்காட்டியுள்ள கபிலன்,

எங்கே போனாள் என்று தெரியவில்லை அவள் காலணி மட்டும் என் வாசலில்...

மின்விசிறி காற்று வாங்குவதற்காவா.. உயிரை வாங்குவதற்காகவா ?

அவள் கொடுத்த தேனீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்..!

அவளுக்கு
கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையா
எனக்குத் தெரியாது
அவளே என் கடவுள்..!

குழந்தையாக
அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற
பாரம் இன்னும் வலிக்கிறது.
கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா
கண்களின் வலி.

யாரிடம் பேசுவது
எல்லா குரலிலும்
அவளே பதிலளிக்கிறாள்.

கண்ணீரின் வெளிச்சம் வீடு
முழுக்க நிரம்பி இருக்க
இருந்தாலும் இருக்கிறது
இருட்டு.

பகுத்தறிவாளன்
ஒரு கடவுளை
புதைத்து விட்டான்..!

என்று தனது கவலையை உருக்கமாய் தெரிவித்துள்ளார் கவிஞர் கபிலன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments