நடிகர் அஜித்தின் புதிய படத்தின் பெயர் துணிவு..!

0 6152

அஜித்குமாரின் புதிய படத்துக்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏகே 61 என்று முதலில் அழைக்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் பெயர், துணிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் காட்சியில் துப்பாக்கியுடன் அஜித்குமார் சாய்ந்து அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. திரைப்படத்தை ஜீ ஸ்டியோஸ், போனி கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்க, ஹெச். வினோத் இயக்குகிறார்.

நேர் கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் 3வது படம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments