தேசிய தளவாடக் கொள்கை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

0 2137
தேசிய தளவாடக் கொள்கை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய தளவாடக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயர் திறன் கொண்ட சோலார் சாதனங்களை உற்பத்தி செய்ய 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது தேசிய தளவாடக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளதாகவும், இதன்மூலம் தளவாட சேவைத் துறைகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில், யுலிப், தரப்படுத்தப்படுதல், திட்டங்களை கண்காணித்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றார். 

செமி கண்டக்டர்கள் மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி சுற்றுச்சூழல் காட்சிபடுத்துதல் தொடர்பான திட்டத்தில் மாற்றங்களை செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகளுக்கு 50 சதவீத ஊக்கத் தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர் திறன் கொண்ட சோலார் சாதனங்களை உற்பத்தி செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் தேசிய திட்டம் மீது தயாரிப்பு அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments