கஞ்சா விற்க முயன்ற வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம்

0 2942

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்க முயன்ற வழக்கில் தேனியை சேர்ந்த நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி போலீசார் அங்கு விசாரணை நடத்த சென்ற போது, பாண்டியன், கதிரேசன், மணிமாறன் மற்றும் தெய்வம் ஆகிய நான்கு பேர் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளதாகவும், இது சமூகத்தில் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments