இந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவாஸ்தவ் மறைந்தார்.. 41 நாள்களாக சிகிச்சை எடுத்த நிலையில் உயிர் பிரிந்தது..!

0 5187

நெஞ்சு வலி ஏற்பட்டு 41 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த இந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவாஸ்தவ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

58 வயதான அவருக்கு, ஜிம்மில் உடல்பயிற்சி செய்தபோது கடந்த மாதம் 10ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. ராஜூ ஸ்ரீவாஸ்தவ் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments