குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த இருவர் கைது..!

0 2897

சென்னையில் பணிக்குச் செல்லும் இளம்பெண்கள் தங்கியிருந்த வீடுகளை குறிவைத்து குளிலயறை வீடியோக்களை செல்போனில் படம் பிடித்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்...

சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள குடியிருப்புகளில் பணிக்கு செல்லும் பெண்கள் சுமார் 40 பேர் தங்கி வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 10 வீடுகள் கொண்ட அந்த குடியிருப்புக்கு பொதுவான குளியலறை மற்றும் கழிப்பறை தான் உள்ளது. இந்த நிலையில் காலை அந்த குளியலறை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் அவர்களை விசாரிக்க தொடங்கியதும் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

இருவரையும் மடக்கிப் பிடிப்பதற்கு முன்பு, தங்களது செல்போன்களை எடுத்து வேக வேகமாக பயன்படுத்தியதை பார்த்தவர்களுக்கு, இருவரும் பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் என தெரியவந்தது.

செல்போன்களில் இருந்த வீடியோக்களை அழித்திருந்ததால் சைபர் கிரைம் போலீசார் மூலம் சாப்ட்வேர் பயண்டுத்தி செல்போன்களில் இருந்த வீடியோக்களை மீட்டனர். அந்த வீடியோக்களில் அதே பகுதியில் வீட்டிற்கு வெளியில் பொதுவாக குளியலறை இருக்கும் வீடுகளை குறிவைத்து பல பெண்களை வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கூலி வேலை செய்யும் நபர்கள், குடியிருப்புகள் நெருக்கடியாக இருக்கும் பகுதிகளில் காலை நேரத்தில் மறைந்திருந்து வீடியோ எடுத்து அதை தன்னுடன் வேலை செய்யும் நபர்களுக்கு காண்பிப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அவர்களது நண்பர்களுக்கும் வீடியோக்களை பகிர்ந்துள்ளதால் சமூக வலைதளங்களில் பதிவேற்றி பணம் சம்பாதித்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments