மகனை மயக்கி வச்சிருக்கியா..? போட்டி போட்டு உயிரை மாய்த்த மருமகள் - மாமியார்..! ஒரே மகன் உயிர் ஊசலால் விபரீதம்..!

0 3186
மகனை மயக்கி வச்சிருக்கியா..? போட்டி போட்டு உயிரை மாய்த்த மருமகள் - மாமியார்..! ஒரே மகன் உயிர் ஊசலால் விபரீதம்..!

புதுச்சேரி அருகே காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, இளைஞர் தூக்கிட்டதால், மகன் மீது கொண்ட பாசத்தால் தாய் உயிரை மாய்த்துக் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் யார் மீது யார் கொண்ட அன்பு பெரியது.? என்பதை காண்பிக்க அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். ஓட்டுனரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த செவிலியரான சந்தியா என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். காதல் மருமகள் சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர்களை ஆனந்த் சமாதானம் செய்து வந்தார்.

மகனை மயக்கி தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருப்பதாக மாமியார் குற்றஞ்சாட்டியதால் விரக்தி அடைந்த சந்தியா, சம்பவத்தன்று வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து பார்த்த ஆனந்த், தனது காதல் மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறிஅழுதார். மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் அவரும், அதே அறையில் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது.

இதை பார்த்த தாய் அன்னக்கிளி கூச்சல் போட்டதும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து கதவை உடைத்து தூக்கில் தொங்கிய ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய கோபமான பேச்சால் மருமகளையும், தனது ஒரே மகனும் தூக்கிட்டத்தை எண்ணி வேதனை அடைந்த அன்னக்கிளியும் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், வீட்டில் அன்னக்கிளி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மருமகள் மற்றும் மாமியாரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடும்பத்தில் யார் மீது யார் வைத்திருக்கும் அன்பு பெரியது ? என்பதை காட்ட மருமகள், மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments