வீட்டின் கதவை உடைத்து ட்ரவுசர் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி.!

0 2702

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வீடு ஒன்றின் கதவிலுள்ள பூட்டை ட்ரவுசர் கொள்ளையர்கள் ஆயுதங்களால் உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலாயுதபுரத்தில் நேற்றிரவு காமுத்தாய் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து 25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் 2 வீடுகளிலும், ராமசந்திராபுரத்திலுள்ள கிருஸ்ணசாமி, விநோத்குமார், அண்ணகாமு ஆகியோரது வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பணமோ, விலை மதிப்புடைய பொருள்களோ இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.

வினோத் என்பவரின் வீட்டு பூட்டை 2 பேர் உடைக்க முயன்றனர். ஒருவன் யாரும் வருகிறார்களா என நோட்டமிட்டுள்ளான். இக்காட்சி சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments