மண் அள்ளப்படுவதாக புகார் அளித்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!

0 2156
மண் அள்ளப்படுவதாக புகார் அளித்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!

சென்னை மாதவரம் அருகே மணல் கொள்ளை தொடர்பாக போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர் நாகராஜ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியபாளையம் அருகே மதுரை வாசல் பகுதியில் உள்ள மண் குவாரியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் எடுப்பது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் நாகராஜ் புகார் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அரசு நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளை கும்பலை சேர்ந்த நடராஜன் என்பவன், செல்போனில் நாகராஜை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments