மெக்சிகோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 2 பேர் உயிரிழப்பு - 200க்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதம்..!

மெக்சிகோவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 2 பேர் உயிரிழப்பு - 200க்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதம்..!
மெக்சிகோவில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் மெக்சிகோவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் கடந்த 1985 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதே நாளான, செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் கொலிமா மற்றும் மிச்சோகன் மாகாணங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நிலநடுக்கத்தின் போது கட்டிடங்களும் வாகனங்களும் குலுங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.
Comments