பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை, ரூ.11 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது..!

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை, ரூ.11 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகைகள், 11 லட்சம் பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 1 சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்த கௌரி, தனது கணவர் வெளிநட்டில் வேலை செய்யும் நிலையில், மகனுடன் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், இவர்களின் உறவினர் கெளரி வீட்டிலுள்ள நாய்க்கு உணவளிக்க சென்ற போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்து வீடு திரும்பிய கெளரி அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு, அந்த வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
Comments