ஆ.ராசா குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது.!

கோவையில், ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பீளமேடு புதூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாலாஜி உத்தம ராமசாமி ஆ.ராசாவை மிகவும் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அளித்த புகாரின் பேரில் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார்.
அவரை, உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது காரை எடுக்க விடாமல் வழிமறித்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
Comments