சித்தூரில் பேப்பர் பிளேட் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலி.!

0 1978

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேப்பர் பிளேட் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

ரங்காச்சாரி தெருவில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பேப்பர் பிளேட் ஆலையில், நள்ளிரவில் மின்கசிவால் பற்றிய தீ ஆலை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இரவுப் பணி முடித்து பாஸ்கர், அவரது மகன் டெல்லிபாபு உட்பட அவரது நண்பர், குடும்பத்தினர் ஆலையின் பின்புற வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மளமளவென பற்றி எரிந்த தீயால் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

வீட்டின் சுவரை உடைத்து பொதுமக்கள் சிலரை மீட்டனர். இருப்பினும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாஸ்கர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments