மழைநீர் வடிகால் கால்வாயில் நிலை தடுமாறி விழுந்த நபர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!
மழைநீர் வடிகால் கால்வாயில் நிலை தடுமாறி விழுந்த நபர்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!
சென்னை ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் கால்வாயில் ஒருவர் நிலை தடுமாறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
வாசுதேவன் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டின் வாசலில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தனது இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்து செல்லும் போது நிலை தடுமாறி சுமார் 15 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்தார்.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாசுதேவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Comments