மகளின் கண்முன்னே தந்தையை தாக்கிய அரசு போக்குவரத்து ஊழியர்கள்.. ஏற்கனவே சமர்ப்பித்த சான்றிதழை மீண்டும் கேட்டதால் வாக்குவாதம்..!

0 2925
மகளின் கண்முன்னே தந்தையை தாக்கிய அரசு போக்குவரத்து ஊழியர்கள்.. ஏற்கனவே சமர்ப்பித்த சான்றிதழை மீண்டும் கேட்டதால் வாக்குவாதம்..!

மகளின் கண்முன்னே தந்தையை கேரள அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், மகளிர் பஸ் பாஸை புதுப்பிக்க தந்தையுடன் கட்டக்காடா பேருந்து நிலைய அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

பஸ் பாஸை புதுப்பிக்க கல்லூரியின் சான்றை ஏற்கனவே சமர்ப்பித்த நிலையில் மீண்டும் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு ஊழியர்கள் மகளின் கண்முன்னே தந்தையை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் கட்டக்காடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments