எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பிரிட்டன் தேசிய கீதத்தை பாட மறுத்தாரா இளவரசர் ஹாரி?

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில், இளவரசர் ஹாரி பிரிட்டன் தேசிய கீதத்தை பாடினாரா? இல்லையா? என சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில், இளவரசர் ஹாரி பிரிட்டன் தேசிய கீதத்தை பாடினாரா? இல்லையா? என சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் ராணியின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது, "காட் சேவ் தி கிங்" என்ற தேசிய கீதத்தை அனைவரும் பாடினர். அப்போது இளவரசர் ஹாரி மட்டும், தேசிய கீதத்தை பாடாமல் நின்றிருந்தது போன்ற வீடியோ இணையத்தில் பரவி விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் தேசிய கீதத்தை பாடியதாக கூறும் சிலர், வேறொரு கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
Comments