சாலையை சரியாக போடச் சொன்னது குத்தமாடா..? தம்பிகள் மீது தாக்குதல்..! திமுக ஒப்பந்ததாரர் அட்டகாசம்..!

0 3739
சாலையை சரியாக போடச் சொன்னது குத்தமாடா..? தம்பிகள் மீது தாக்குதல்..! திமுக ஒப்பந்ததாரர் அட்டகாசம்..!

நாகர்கோயில் அருகே சாலையை தரமாக போடச்சொன்ன நாம் தமிழர் கட்சியினரை, ஒப்பந்ததாரர் கூட்டாளிகளுடன் வந்து அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே இறச்சகுளம் பகுதியில் இருந்து துவரங்காடு வரை சாலை பழுதடைந்ததால் அங்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும் அரசு ஒப்பந்ததாரருமான கேட்சன் என்பவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது

இந்த சாலை தரமற்ற முறையில் போடப்படுவதாக குற்றம் சாட்டய நாம்தமிழர் கட்சியினர் , தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளபடி பழைய சாலையை அகற்றி விட்டு, புதிய சாலை அமைக்காமல், பழைய சாலை மீதே தரமற்ற முறையில் புதிய சாலை போடுவது ஏன்? எனக்கேட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலையின் தரத்தை குச்சிகளை வைத்து ஆய்வு செய்த தம்பிகள், அதிகாரிகளிடம் சாலையை தரமாக அமைக்க வேண்டும் இல்லையேல் சாலை அமைக்க விட மாட்டோம் என்று போர்க் குரல் எழுப்பினர்.

இதை அறிந்து அங்கு வந்த ஒப்பந்ததாரர் கேட்சன், தனது கூட்டாளியான தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் ஆகியோர் தலைமையிலான கும்பல், நியாயம் கேட்ட நாம் தமிழர் தம்பிகளை ஓட ஓட விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளை வேட்டி சட்டை சகிதம் ஆவேசம் காட்டிய பிராங்கிளின் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கன்னத்தில் அறைந்து ஓடவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments