நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் கொள்ளையர்கள் கைவரிசை.. அரிவாளைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு..!

0 2177
நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் கொள்ளையர்கள் கைவரிசை.. அரிவாளைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அரிவாளை காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பணம் பறித்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த பெட்ரோல் பங்கிற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கூகுள்-பே யில் பணம் செலுத்துவதாகக்கூறி பெட்ரோல் டேங்கை நிரப்பிக்கொண்டனர்.

ஊழியர் காசு கேட்டபோது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெரிய அரிவாள்களை காட்டி மிரட்டி பங்கிலிருந்த 7,000 ரூபாய் பணம், ஊழியர்களின் 2 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments