இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டம்..!

0 5303
இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டம்..!

இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து கோவை மேட்டுப்பாளையம், திருப்பூர் அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு சத்தியமங்கலத்தில் கடைகளை திறக்கக் கூடாது என இந்து முன்னணியினர் கூறிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நகராட்சி தலைவருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திறந்து வைக்கப்பட்ட கடைகளின் மீது இந்து முன்னணியினர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments