நடுவானில் விமானத்தின் ஜன்னலை காலால் உதைத்து அத்துமீறிய பாகிஸ்தான் பயணி

0 2672
நடுவானில் விமானத்தின் ஜன்னலை காலால் உதைத்து அத்துமீறிய பாகிஸ்தான் பயணி

துபாய் சென்ற பாகிஸ்தான் விமானத்தில் பயணியின் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் இன்டர்நேசனல் விமானம் ஒன்று பெஷாவரிலிருந்து துபாய் நோக்கி சென்றது. இதில் பயணம் செய்த பாகிஸ்தான் பயணி தன்னை விமானத்திலிருந்து இறக்கி விடுமாறு நடுவானில் விமானப் பணியாளர்களிடம் கூறினார்.

பணியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானமாகவில்லை. இருக்கைகளை குத்துவதும், உதைப்பதுமாக இருந்த அவர் இருக்கையின் மீது ஏறிச் சென்று ஜன்னலை தனது காலால் எட்டி உதைத்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் விமான நிலையம் சென்ற அந்த பயணி, பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments