கலப்படம் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோம்பு, சீரகம் பறிமுதல்!

0 2700

சேலம் அருகே கலப்படம் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  சீரகம், சோம்பு ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்தைப்பேட்டை பிஜி ரோடு பகுதியில் கிரித்குமார் ராமன் லால் என்பவருடைய குடோனில் உணவு பாதுகாப்பு  குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

8 ஆயிரத்து 250கிலோ சீரகம், 4ஆயிரத்து 180கிலோ சோம்பு, அதில் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த வேதி பொருட்கள், செயற்கை வண்ண நிறமிகள்,மாவுப் பொருட்கள், உலர்த்த வைக்கப்பட்டிருந்த விசிறிகள்,எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments