ஹோட்டல் ஊழியருக்கு 3,000 டாலர் டிப்ஸ்.. அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு அழுத ஊழியர்..!

0 36000

அமெரிக்காவில் ஒரு ஹோட்டல் ஊழியருக்கு வழங்கப்பட்ட டிப்ஸ் தொகை இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஸ்க்ரான்டனில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் (Mariana Lambert) மரியானா லம்பேர்டுக்கு, வாடிக்கையாளர் ஒருவர் 963 சதவிகித தொகையை டிப்ஸாக வழங்கியிருக்கிறார்.

வெறும் 13 டாலருக்கு மட்டுமே உணவருந்திய அந்நபர், சுமார் மூன்றாயிரம் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

இந்த டிப்ஸ் விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் வேளையில், இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் மீது உணவக உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments